உலகின் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சாதனையை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிகழ்த்தியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடி உயர கொடி மரத்தை நிறுவி அதில் கொடியை பறக்கவிட்டுள்ளது.
150 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடியின் அளவு அகலம் 35 அடி, நீளம் 20 அடி என வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் முழுக்க முழுக்க சென்சார் உதவியுடன் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொடியேற்றுவது, இறக்குவது, பறக்கவிடுவது என எல்லாமே ரிமோட் கன்ட்ரோல் மூலமே இயக்க முடியும்.
5 மாதம் இடைவெளி… இன்று முதல் சென்னையில் டாஸ்மாக் திறப்பு
திமுக தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தின் உயரமானது 114 அடியாகும்.
அறிவாலயத்தில் உள்ள திமுக கொடிக் கம்பம்
இது தான் இந்தியாவிலேயே அதிக உயரம் கொண்ட கொடிக்கம்பம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அந்த சாதனையை தமிழக காங்கிரஸ் முறியடித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 367 அடி உயர கொடிமரம் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். டெல்லி நிறுவனம் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிறுவப்பட்டுள்ள இந்த 150 அடி உயர கொடிக்கம்பத்தின் மொத்தச் செலவு ரூ.20 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த இந்த கொடிமரத்தின் உயரமும், எடையும் அதிகம் என்பதால் அடித்தளத்தில் காங்கிரீட் கலவை கொண்டு வலிமையாக கட்டமைக்கப்பட்டு பெயர்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கிற வகையில் சர்வதேச தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 150 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்தில் எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இவ்வளவு பெரிய கொடி அமைத்ததில்லை என்கிற கின்னஸ் சாதனையை இது படைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரசின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றுகிற வகையில் 150 அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”