Advertisment

விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி

தந்தை பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் காங்கிரஸிற்கு திரும்ப முக்கிய பங்காற்றியவர் ஆவார்.

author-image
WebDesk
New Update
விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி

முதன் முதலில் 1984ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தவர் மறைந்த பழம்பெரும் நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் என்றும் கூறப்படுவது உண்டு.



Advertisment

அருண் ஜனார்த்தனன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் தமிழ்மகன் ஈவெரா. இவர் காலமானதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் முதலில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் தயங்கினார். தனது இளைய மகன் சம்பத்-ஐ போட்டியிட வைக்கவே விரும்பினார். ஆனால் தற்போது அவரே களத்தில் போட்டியாளராக நிற்கிறார்.

74 வயதான ஈவிகேஸ் இளங்கோவன் பல இக்கட்டான சூழல்களில் காங்கிரஸிற்கு கைகொடுத்தவர். இவரை அக்கட்சியின் இளைய தலைவர்கள் அப்பா என்றும், மூத்த தலைவர்கள், “தன்மானத் தலைவர்கள்” என்றும் அழைப்பார்கள்.

முதன் முதலில் 1984ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தவர் மறைந்த பழம்பெரும் நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் என்ற கூற்றும் உண்டு.

மேலும் இவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பமும் நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டது. இவரின் தாத்தா, தமிழ்நாட்டின் முக்கிய சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான தந்தை பெரியார் ஆவார்.

ஆம். தந்தை பெரியாரின் அண்ணன் மகனான சம்பத்தின் மகன்தான் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன். சி.என். அண்ணாத்துரை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தை நிறுவினார்.

அப்போது அவருடன் சம்பத்தும் இருந்தார். பின்னாள்களில் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகி, சம்பத் காங்கிரஸில் இணைந்தார். இதுவே ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸில் பயணிக்க காரணம் ஆகிவிட்டது.

இதற்கிடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா அதிமுகவில் பயணித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவருக்கு அக்கட்சியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு கடும் சோதனை 1996-ல் ஜி.கே. மூப்பனார் வழியில் வந்தது. அப்போது காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது.

அக்காலக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்து பலரும் வெளியேறினார்கள். அந்த நெருக்கடியான சூழலில் காங்கிரஸுடன் கைகோர்த்து நின்ற தலைவர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர்.

மேலும், 2001-ல் தந்தையார் ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்கு பின்னர் வாசன் மீண்டும் காங்கிரஸிற்கு திரும்பினார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பங்கு மிக முக்கியமானது.

அதேபோல் 2004 மக்களவை தேர்தலுக்கு முன்பு ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கிய பங்கு வகித்தார்.

அப்போது, ப.சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். தொடர்ந்து 2004 மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஆனார்.

இருப்பினும், 2009 மக்களவை தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அப்போதைய கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் 2014ல் மீண்டும் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவியில் 2016ஆம் ஆண்டு வரை திறம்பட செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் எழுத்தாளர் ஆனந்த் சீனிவாசன், நடிகை குஷ்பு என பலரும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தனர்.

குஷ்பு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “இளங்கோவன் தன்னைப் போன்ற பலரை அழைத்து வந்துள்ளார். அவரது காலத்தில், நிறைய இளம் திறமையாளர்கள் கட்சியில் இடம் பெற்றனர், அதே நேரத்தில் காங்கிரஸின் ஐடி பிரிவு வேகத்தைக் கண்டது” என்றார்.

மாநிலக் கட்சித் தலைவராக வெற்றிகரமாக இருந்த போதிலும், இளங்கோவன் தனது கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார், குறிப்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உட்பட பலர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனுக்கு சீட் கொடுக்க விரும்பிய எண்ணம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த சீட்-ஐ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அளிக்கவே காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்பினர். அவரது இளைய மகன் ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். அவர் தீவிரமாக அரசியலில் இருந்தது இல்லை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Congress Evks Elangovan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment