கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்குவது திடீர் நிறுத்தம் : ஸ்டாலின் கண்டனம்

Cooperative banks : கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

By: Updated: July 14, 2020, 06:53:00 PM

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ளதால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்தே செலவை சமாளித்து வருகின்றனர். தற்போது எந்த காரணமும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளை மக்கள் நாட வேண்டியுள்ளது.

ஸ்டாலின் கண்டனம்

டிடிவி தினகரன் கண்டனம் : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu cooperative banks credit services stop reserve bank of india people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X