தமிழகத்தில் இன்று மட்டும் 5,860 பேருக்கு உறுதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, மாலை தமிழக சுதாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,236-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 2,72,251-பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குனமடைவோர் விகிதம் இதுவரை 81.98 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 54,213 ஆக உள்ளது.
சென்னை நிலைமை : சென்னையில் மீண்டும் கொரோன பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது. இன்று மட்டும் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,321 ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,641-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்கள் நிலைமை:
அரியலூர் – 73
செங்கல்பட்டு – 376
சென்னை – 1179
கோவை – 290
கடலூர் – 339
தர்மபுரி – 18
திண்டுக்கல் – 118
ஈரோடு – 14
கள்ளக்குறிச்சி – 81
காஞ்சிபுரம் – 184
கன்னியாகுமரி – 182
கரூர் – 40
கிருஷ்ணகிரி – 56
மதுரை – 90
நாகை – 80
நாமக்கல் – 33
நீலகிரி – 32
பெரம்பலூர் – 26
புதுக்கோட்டை – 170
ராமநாதபுரம் – 59
ராணிப்பேட்டை – 260
சேலம் – 200
சிவகங்கை – 49
தென்காசி – 87
தஞ்சாவூர் – 109
தேனி – 213
திருப்பத்தூர் – 70
திருவள்ளூர் – 422
திருவண்ணாமலை – 99
திருவாரூர் – 54
தூத்துக்குடி – 77
திருநெல்வேலி – 169
திருப்பூர் – 68
திருச்சி – 117
வேலூர் – 146
விழுப்புரம் – 83
விருதுநகர் – 167
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 0
உள்நாடு – 0
ரயில் நிலைய கண்காணிப்பு – 0
சென்னையில் சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று 1000க்கும் குறைவாக பதிவான நிலையில் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறதோ என்று தோன்றுகிறது. இருப்பினும், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும், கடலூர், ராணிப்பேட்டை, கோவை, புதுக்கோட்டை,சேலம் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil