கொரோனா நோய்த்தொற்றின் பரவலைக் கண்டு மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், மருத்துவர்கள் அளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்தொடரும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஒன்று மட்டுமே செயல்பட்டுக்கொண்டு இருந்தது.
கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை 'கார்பெவாக்ஸ்' எனப்படும் தடுப்பூசியை மட்டுமே வழங்குகிறது என்று கோ-வின் போர்டல் அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஊரடங்கும் இருந்த காலத்தில், தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) எடுக்க தாமதமாகியவர்கள் அல்லது தவறியவர்கள், தற்போது கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை மருத்துவமனைகளில் கேட்க முயற்சிக்கின்றனர். ஆனால், தற்போது கிடைக்காத காரணத்தினால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுகிறது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியான corbevax கிடைக்க முன்பதிவு செய்து பெறுவது ஒரு முறையாக இருந்தாலும், மக்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடைக்காமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்துகிறது.
தற்போது சென்னையில் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி மையம் இல்லை. மதுரையில் ஒரு தடுப்பூசி மையம் இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர் மற்றும் திருச்சியிலும் தடுப்பூசி மையம் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil