மியூசியம், தியேட்டர், டாஸ்மாக் பார்கள் மே 31 வரை மூடப்படுகின்றன: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் மூட உத்தரவிட்டு முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Entertainment, tamil cinema theatre, coronavirus, covid 19

கொரோனா வைரஸ் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் மூட உத்தரவிட்டு முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 6,500-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனாவைத் தடுக்க எல்லா நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய அரசு, தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளி மாநில பஸ்களில் வருபவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் உள்ளிட்ட ஹைலைட்ஸான அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* அதே போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாரதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

* தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார்ஆம்னி பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான
கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், ரயில்வே, மாநகரப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கோரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

* இரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும்
லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து இரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஇரயில் நிலையங்களையும், இரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம்
செய்யுமாறு தென்னக இரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. (இது குறித்து, முதலமைச்சர் அவர்களிடமிருந்து மத்திய
இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது).

* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக
மேற்கொள்ள வேண்டும்.

* ஒருங்கிணைந்த குளிர்சாதனை வசதி உள்ள இடங்களில் அவற்றை (Vent, Duct) ஆகியவற்றை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.

* தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொது மக்களை அனுமதிக்க வேண்டாம் என சட்டப் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொது மக்கள் தவிர்க்கவும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் (10 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.

* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப்
பொருட்களை (dry ration) அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (Malls), கேளிக்கை அரங்கங்கள் (Amusement Parks), நீச்சல்
குளங்கள் (Swimming Pools), உடற்பயிற்சி மையங்கள் (Gymnasiumsள), உயிரியல் பூங்காக்கள் (Zoos) மற்றும் அருங்காட்சியகங்கள் (Museums) 31.3.2020 வரை
மூடப்பட வேண்டும்.

* ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே
திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31.3.2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

* திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கொரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனை கடைபிடிக்குமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக் கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்கக் கூடாது.

* அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் (clubs) போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.

* மேற்கூறியவற்றைத் தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும்.

* கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது
நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

* அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

* அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையாளர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் தொற்று நோய் சட்டம், 1897, மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939ன்படி பிறப்பிக்கட்ட மேற்கண்ட உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளை சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி,
கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு
அறிவுறுத்தியுள்ளதாலும், பொது மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாகக் கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் 31.3.2020 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொது மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

* சுற்றுலா பயணியர் தங்குமிடம் (Tourist Resorts) அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் (Advance Booking) 31.3.2020 வரை செய்யக் கூடாது.

* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்விடங்களில், நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தெர்மல் ஸ்கேனர் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறையும் சுகாதாரத் துறையும் மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

* யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்திய தண்டனைச் சட்டம்,  பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu corona virus all schools colleges holiday cm edappadi palaniswami statement

Next Story
வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் போராட்டம் தள்ளிவைக்கப்படுமா? முடிவில் இழுபறிcoronavirus, tamil nadu islamic movements and political parties federation, caa protest, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, chennai old washermanpet caa protest, சிஏஏ போராட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை, islamic movements and political parties seeks to suspend caa protest, சென்னை ஷாஹீன் பாக், chennai shaheen bagh, coronavirus fear, tamil nadu news, chennai shaheen bagh news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com