Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 19) ஒரே நாளில் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 30, அரசு மருத்துவமனைகளில் 36 என மொத்தம் 66 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,751-ஆக அதிகரித்துள்ளது .
குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,556 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,81,273 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 89.71 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,453 ஆக உள்ளது.
இந்தியாவின் மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ள நிலையில், உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும். தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 90 சதவீதம் பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 562 (செப்டம்பர் 17 – 530) , சேலம் – 286 (செப்டம்பர் 17 – 291), செங்கல்பட்டு – 293 (செப்டம்பர் 17 – 283 ), கடலூர் – 289 (செப்டம்பர் 17 – 206), திருவள்ளூர் – 282 (செப்டம்பர் 17 – 239), திருப்பூர் – 163 (செப்டம்பர் 17 – 191), காஞ்சிபுரம் – 175 ,(செப்டம்பர் 17 – 187), விழுப்புரம் – 144 (செப்டம்பர் 17 – 125), திருநெல்வேலி – 108 (செப்டம்பர் 17 – 95), வேலூர் – 146 (செப்டம்பர் 17 – 141) என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 18 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் இன்று 987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4, 583 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,54,624 ஆக அதிகரித்துள்ளது.