Tamil Nadu coronavirus cases raise above over 3 lakhs: தேனியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக மோசமாகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டுள்ளது. பாதிப்பு . மாநிலத்திலேயே அதிக நோயாளிகள் உள்ள 3வது மாவட்டமாக தேனி மாறி உள்ளது. செங்கல்பட்டு , காஞ்சிபுரத்தையும் நோயாளிகள் எண்ணிக்கையில் முந்தியுள்ளது.
மதுரையில் 1265 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மிகச்சிறிய மாவட்டமான தேனியில் நிலைமை மிக மோசமாக இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெற்று பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 300 என்கிற அளவில் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம், தேனி, போடியில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது.

கொரோனா உயிரிழப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 114 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் , மாநிலத்தில் கோவிட்- 19 தொடர்பான உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 5,041-ஆக அதிகரித்துள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை: இன்று மட்டும் 6,037-பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2,44,675-பேர் இதுநாள் வரையில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, நோய்த் தொற்றால் பாதித்தவர்களில் 80.80 சத விகிதம் பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,099 ஆக உள்ளது.
கொரோனா பரிசோதனை நிலவரம்:
தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 65,141 பேருக்கு செய்யப்பட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரையில், தமிழகத்தில் 31,74,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்: சென்னையில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 976 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, தற்போது கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,328 ஆக உள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு பட்டியல்:
சென்னை-976;
செங்கல்பட்டு- 483;
திருவள்ளூர்-399;
தேனி- 357;
காஞ்சிபுரம்- 310;
கோவை -292;
கடலூர்- 287;
கன்னியாகுமரி - 205;
தூத்துக்குடி-196;
வேலூர் -189;
விருதுநகர்-189;
ராணிப்பேட்டை- 184;
திண்டுக்கல்-173;
திருவண்ணாமலை -154;
புதுக்கோட்டை- 133;
சேலம்-128
இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் நாளை காலை 10:30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் நாளை காலை 10:30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.