New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-07-30T191231.190-3.jpg)
tamil nadu news today : கொரோனா தொற்று
Advertisment
உயிரிழப்பு: இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 40 பெரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,748-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இன்று மட்டும் 79,840 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. இதுவரை 50,42,197 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
சென்னையில் கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, சென்னையின் மொத்த பாதிப்பு 1,40,685 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், தற்போது 11,412 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மற்ற மாவட்டங்களின் நிலவரம்:
தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல், மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்தது. மேலும், அன்றைய தினத்திலிருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் பயணியர் ரயில் சேவைகளைத் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 20, 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 59,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,859-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,583 ஆக உள்ளது.