அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலரைத் தாண்டியது ஏன்? இந்தியாவில் எரிபொருள் விலையை எப்படி பாதிக்கும்?
இதற்குமுன் இப்படி பார்த்தது உண்டா? 6, 7, 8, 9-வது வரிசையில் அசத்தும் ‘நம்பிக்கையான நால்வர்’
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல… பல மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை உயர்வு
பாக்கியராஜ் கையில் குழந்தையாக… இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை தெரிகிறதா?
JEE Main Results: இன்று வெளியாகிறது; மார்க் ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 20, 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 59,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,859-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,583 ஆக உள்ளது.