Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது .
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 37 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 39 பேர்கள் என 76 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,227-பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 88.85 % குணமடைந்துள்ளனர்
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 47,110 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 978 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 428, திருவள்ளூர் – 299, சேலம் – 289, செங்கல்பட்டு – 267, திருப்பூர் - 256, கடலூர் – 253, விழுப்புரம் – 175, காஞ்சிபுரம் – 133, வேலூர் – 124, திருநெல்வேலி – 108, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 5 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இன்று 978 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,517 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil