Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 85,362 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளில் 75 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/corona-daily-wise-outcome.jpg)
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 27, அரசு மருத்துவமனைகளில் 53 என மொத்தம் 80 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,313-ஆக அதிகரித்துள்ளது.

குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,706-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.42% குணமடைந்துள்ளனர்.
உலகத்திலேயே அதிக அளவில் குணமடைதல் விகிதங்களை கண்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக்கு இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாகும்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,341 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,280 (நேற்றைய எண்ணிக்கை 1,187) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 596, சேலம் – 378, செங்கல்பட்டு –296, திருப்பூர் – 282, கடலூர் – 256, திருவள்ளூர் – 202, காஞ்சிபுரம் – 196, விழுப்புரம் – 144, வேலூர் – 115, திருநெல்வேலி – 111 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 5 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 1,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,63,423 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,656 ஆகும்.
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil