Tamil Nadu covid 19 cases Tamil News: சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், மருத்துவமனைகளில் 20% மேலான படுக்கைகள் காலியாகியுள்ளன. இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எஸ்.எம்.சி.எச்) போன்றவற்றில் மட்டும் சுமார் 2,000 மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேல் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடியவையாக உள்ளன.
இது குறித்து பேசியுள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதர அதிகாரி "கொரோனா தொற்று சேர்க்கை குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் முழு ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்ட படுகைகளில் தற்போது வெறும் 12 நோயாளிகள் மட்டும் தான் உள்ளனர். தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது 150 படுக்கைகளும் நிரப்பட்டு இருந்தன. இதற்காக 120 ஆம்புலன்ஸ்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
"ஓமாந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை கடந்த மாதத்தில் தான் இரட்டிப்பாக்கப் பட்டன. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 25% கீழ் தற்போது குறைந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் ஐந்து படிநிலை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளை இந்த பிரிவிற்கு நாங்கள் மாற்றுவோம். அதோடு மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் படுக்கைகள் மீதான அதிக மன அழுத்தம் இப்போது குறைந்துள்ளது என்று மருத்துவமனையின் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கெதிராக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு தொடர்ந்து அதிக ஆக்ஸிஜன் படுக்கைகளைச் சேர்த்து வருகிறது. நேற்று செவ்வாய் கிழமை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கைகளை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளைப் பொருத்தவரை, மொத்தத்தில் 34% அதாவது 8,300 கோவிட் படுக்கைகள் நேற்று காலியாக இருந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில் மருத்துவமனைகளின் 50% படுக்கைகளை கோவிட் படுக்கைகளாக மாற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், நிறைய மருத்துமனைகள் 50% மேல் ஒதுக்கியன என்பது குறிப்பிடக்க ஒன்று.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.