குறையும் கொரோனா பாதிப்பு; ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலியாகும் படுக்கைகள்…

Rajiv Gandhi Government General Hospital get more beds as covid cases decline Tamil News: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் படுக்கை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu covid 19 cases Tamil News: Rajiv Gandhi Government General Hospital get more beds as covid cases decline

Tamil Nadu covid 19 cases Tamil News: இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2வது அலை தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 35,000க்கு மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 500க்கு குறையாமலும் பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினசரி பாதிப்பு 31,079 ஆகவும், இறப்பு 486 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் நோயில் இருந்து குணமாகி வீடு திரும்பி வருவதால் மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் காலியாகி வருகின்றன.

தலைநகர் சென்னையை உலுக்கிய கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்திய
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் படுக்கை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளை அழைத்து வர எப்போதும் 20 முதல் 30 ஆம்புலன்ஸ்கள் வளாகத்திற்கு வெளியே காத்திருந்த நிலை மாறிவிட்டதாகவும், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்னணி மூன்றாம் நிலை மருத்துவமனையின் நிலைமை மேம்பட்டுள்ளது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஒரு ஆம்புலன்ஸ் வரும்போது, ​​நாங்கள் உடனடியாக நோயாளியை வார்டுக்கு மாற்றுவோம். இப்போது காத்திருப்பு இல்லை. மே முதல் வாரத்தில் உச்சக்கட்டத்தின் போது கோவிட் ஜீரோ தாமத வார்டில் சுமார் 250 முதல் 270 நோயாளிகள் வரை இருந்தனர. இப்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 120 நோயாளிகளுக்கு குறைந்துள்ளது. தற்போது, ​​மருத்துவமனையில் இருக்கும் 2,050 படுக்கைகளில், சுமார் 1,455 படுக்கைகள் காலியாக உள்ளன” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிப்படுவோர்களின் எண்ணிக்கை குறைந்த வரும் நேரத்தில், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த மே 12 அன்று 7,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 27 அன்று 2,779 ஆக குறைந்ததுள்ளது. மேலும் கடந்த 50 நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதம் 10% க்கும் குறைந்து காணப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஐந்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு விகித பரவலைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. இதற்கிடையில் தொற்றுக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைய காரணம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்றும் பல ஒழுங்கு சிகிச்சை வசதிகளை அதிகரித்தது தான் என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu covid 19 cases tamil news rajiv gandhi government general hospital get more beds as covid cases decline

Next Story
5 வருட பழக்கம்; 3 முறை கருக்கலைப்பு: மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஷாக் புகார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express