Tamil Nadu covid 19 cases Tamil News: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து வரும் நிலையில், மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தி கொள்வதற்காக மத்திய அரசு நியமித்துள்ள எண்ணிக்கையை தமிழ்நாடு இன்னும் எட்டவில்லை என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தி கொள்வதற்கான 3 வழிகாட்டுதல்களை கடந்த செவ்வாயன்று மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. அதில், ‘சராசரியாக ஏழு நாள் சோதனையில் நேர்மறை (கொரோனா பாசிடிவ்) விகிதம் (டிபிஆர்) 5% க்கும் குறைவானதாக இருக்க வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டோர்களில் 70% க்கும் அதிகமானனோர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். “கவனிப்பு மற்றும் கோவிட் சமூக உரிமை -19 பொருத்தமான நடத்தை ” முறையாக இருத்தல் வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் 5% க்கும் குறைவான வாராந்திர டிபிஆர் இல்லை. காஞ்சீபுரம் மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மட்டும் 9.4% முதல் 9.6% வரை மிகக் குறைந்த டிபிஆர்- ஐக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து வேலூர் (11.2%) மாவட்டம் உள்ளது.
ஜூன் 7 ஆம் தேதிக்குள் இந்த விகிதங்கள் 5% க்கும் குறையும் என்று கணிக்க முடியாது எனவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது மற்றும் நீக்குவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
குறைந்தது 23 மாவட்டங்களில் வாராந்திர டிபிஆரில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கின் துவக்கத்தில சுமார் 2,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 996 ஆக குறைந்துள்ளது. மேலும் 32.4% ஆக இருந்த டிபிஆர் முடிவுகள் இந்த வாரம் 19.9% ஆக குறைந்து காணப்படுகிறது.
இதேபோல், சென்னையில் தினசரி புதிய தொற்று பாதிப்பு சுமார் 7,500 முதல் 2,500 க்கும் குறைந்துள்ளது. ஊரடங்கின் துவக்கத்தில் 23.3% இருந்த பாதிப்பு இப்போது 11.4% உள்ளது. அதோடு குறைந்தது 23 மாவட்டங்களில் மாநில சராசரியான 19% க்கு மேல் உள்ளது.
“சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேர்மறை வீதம் மற்றும் தொற்று வீதம் குறைந்துள்ளது. மேற்கு அல்லது மத்திய பகுதிகளில் இதே போன்ற எண்ணிக்கை குறைவு இல்லை” என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரத்தில் 32.8% இருந்த திருப்பூர் மாவட்டத்தின் தொற்று பாதிப்பு தற்போது 38.1 சதவீதத்தைத் தொட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 30.5% உடன் ஒப்பிடும்போது 36.6% டிபிஆரைப் பதிவு செய்துள்ளது. ஈரோட்டின் டிபிஆர், கடந்த வாரம் சுமார் 27% ஆக இருந்தது, இது தற்போது 30% க்கு அருகில் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் மருத்து நிபுணர் குழு ஆலோசனை இன்று நடத்தப்பட்டது. இதில் முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்து நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும், தொற்று பாதிப்பு மிக கணிசமாக குறைந்துள்ள பகுதிகளில் மட்டும் சில தளர்வுகளை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“