சென்னையில் குறைந்து வரும் கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 94% அதிகரிப்பு

Tamil Nadu’s discharge rate Tamil News: தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,215 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட 43% குறைவு ஆகும்.

Tamil Nadu covid 19 cases Tamil News: Tamil Nadu’s discharge rate nears 94%

Tamil Nadu covid 19 cases Tamil News: இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலை முக்கிய நகரங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தின் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், தொற்றிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 23,207 ஆகா பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுதும் குணமடைந்தவர்களின் விகிதம் 94% ஆக உள்ள நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோர்களின் விகிதத்தில் கணிசமான வீழ்ச்சி உள்ளது. அதோடு தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,215 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட 43% குறைவு ஆகும். இதே போல் கொரோனா படுக்கை காலியாகும் விகிதமும் அதிகரித்தே வருகின்றன. 3,246 தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) மற்றும் 29,944 ஆக்ஸிஜன் படுக்கைகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் 1.11 லட்சம் படுக்கைகள் காலியாக உள்ளன.

கொரோனா 3 வது அலை ஒருவேளை உருவெடுத்தல் அது அதிகமாக குழந்தைகளை (18 வயதுக்குக் கீழே) பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்களிடமும் குழந்தை வார்டுகளில் குறைந்தது 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

“புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவர்கள் இதுபோன்ற கணிப்புகளை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நாங்கள் அனைத்து அரசு வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்” என்று சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் குறிப்புட்டுள்ளார்.

சென்னையில், புதிய வழக்குகளின் எண்ணிக்கை (793) 50 நாட்களுக்குப் பிறகு 800-ஐ விடக் குறைந்துள்ளது. கோயம்புத்தூர் (1,563) மற்றும் ஈரோடு (1,270) ஆகியவை தொடர்ந்து புதிதாக பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்து வருகின்றன. ஆனால் தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. திருச்சி (360) மற்றும் மதுரை (192) ஆகியவற்றிலும் இதேபோன்ற போக்கு காணப்படுகிறது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 267 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,068 ஆக உள்ளது. இது நாட்டின் மூன்றாவது அதிகபட்சமாகும். இறப்பு விகிதம் இன்னும் 1.3% ஆக அதிகமாகவே உள்ளது.

தமிழத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,736 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளது. இந்த நோய்க்கான மருந்தாக உள்ள ஆம்போடெரிசின் பி குப்பிகள் 45,000 வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், 11,796 டோஸ்கள் மட்டுமே பெறப்பட்டது. மேலும் 4,366 டோஸ்கள் மட்டுமே இருப்பு உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

இந்த வாரம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அது நேற்று செவ்வாய்க்கிழமை 68,046 ஆக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1,06,65,464 உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu covid 19 cases tamil news tamil nadus discharge rate nears 94

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com