கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி

புதுக்கோட்டை , திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளன.

By: Updated: October 28, 2020, 11:20:26 PM

Tamil Nadu Covid- 19 Trend : தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,516  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 43,893 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, மகாராஷ்டிராவை விடவும் கேரளாவில் அதிக எண்ணிக்கையில்  புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தினமும் 5000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

 

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 16, அரசு மருத்துவமனைகளில் 19 என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பத்து மாநிலங்கள்  யூனியன் பிரதேச மாநிலங்களில் மட்டும் 79 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

பத்து லட்சம் பேருக்கு 87 உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இந்தியாவில் தொடர்ந்து குறைவான மரணங்கள் என்ற நிலை நீடிக்கிறது. அதே நேரத்தில் உலக அளவில் பத்து லட்சம் பேருக்கு 148 பேர் மரணம் அடைகின்றனர்.

பரிசோதனை நிலவரம்:  தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 71,147 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட பரிசோதனை எண்ணிக்கை இன்று அதிகரித்து இருந்தாலும், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட குறைந்து காணப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 3,859  பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,79,377 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 94.78% குணமடைந்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 26,356 ஆக குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 688  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 218, சேலம் – 147, செங்கல்பட்டு –150, திருவள்ளூர் – 138 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை , திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளன. புதுக்கோட்டையில் நேற்றைய தொற்று எண்ணிக்கை 25 ஆக இருந்தது.

 

சென்னையில் இன்று 688  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,97,751 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7804  ஆகும்.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், வல்லுநர்கள் தரும் அறிக்கைக்கு பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலவர் தெரிவித்தார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu covid 19 trend covid 19 cases in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X