தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
Advertisment
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் முக்கவசம், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழத்தில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கி வந்த கொரோனா தொற்று பாதிப்பு இன்று 8 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 33 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisment
Advertisements
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 2,636 பேருக்கும், செங்கல்பட்டு 795 பேருக்கும், கோவையில் 583 பேருக்கும், திருவள்ளூரில் - 453 பேருக்குமு, காஞ்சிபுரத்தில் - 303 பேருக்கும், தூத்துக்குடியில் 277 பேருக்கும், திருச்சியில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil