தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மாநிலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று புதிய உச்சமாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் 10,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 29 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டில் 954 பேருக்கும், கோயம்புத்தூர் 727 பேருக்கும், திருவள்ளூர் 503 பேருக்கும், காஞ்சிபுரம் 332 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் ஒற்றை இலக்கத்தில் 5 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இரட்டை மற்றும் மூன்றிலக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் மாநிலத்தில் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 13,113 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று, 5925 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தற்போது தமிழகத்தில் 70,391 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலான மொத்த பாதிப்பு 9,91,451 ஆக உள்ளது. இன்று, 1,10,130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மாநிலத்தில் 2,11,87,630 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இன்று பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil