/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-nadu-lockdown.jpg)
Tamilnadu Lockdown Update : தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவலை கட்டப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு உத்தரவு வரும் அக்டோபர் 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்க்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சம் பெற்ற நிலையில் கடந்த மே ஜூன் மாதங்களில் முழு ஊரடங்கு அம்ல்படத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறையத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் இயல்புநிலைக்கு திருபியுள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதாதால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எல்லைகளில் கண்ணகானிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.
இதன் காரணமாக அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.