Tamil Nadu covid news in tamil: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலையின் தாக்கம் தற்போது தான் தணிந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த மே 21 முதல் குறைவாக பதிவாகி தினசரி கொரோனா பாதிப்பு 69 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 1,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை 1,859 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமையில் புதியதாக தொற்று பாதிப்பட்டோர்களில் ஒன்று முதல் 26 பேர் 38 மாவட்டங்களில் உள்ள 20 மாவட்டங்களை மட்டும் சேர்ந்தவர்கள் என தரவு காட்டுகிறது. இவற்றில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில்
கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பகிறது.
சென்னையில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டார்கள் கடந்த ஜூலை 26 அன்று 122 ஆக இருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை 181 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கோயம்புத்தூரில் 164 முதல் 188 ஆகவும், ஈரோடில் 127 என்பது 166 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் “ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 1.3 லட்சம் சோதனைகளை நாங்கள் செய்தோம். இப்போது 1.5 லட்சம் பேரை சோதித்து வருகிறோம், அவர்களில் பெரும்பாலோர் அதிக பாதிப்புக்கு உள்ளவர்களாக உள்ளனர். இதனால் புதிய தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது ”என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, இதுவரை 34,023 தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று 28 பேரும், நேற்று முன்தினம் 29 பேரும் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தவிர, 21,207 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, கோவை ஈரோடில் அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக கோயம்புத்தூர் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் புதன்கிழமை 179 ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று வியாழக்கிழமை 188 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று மட்டும் 181 பேருக்கு புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இணைந்துள்ள ஈரோடில் நேற்று 166 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“