கொரோனா தொற்று மரணங்கள்; அதிகாரப்பூர்வ தரவுகளைக் காட்டிலும் 4 மடங்கு கூடுதல் மரணங்கள்?

இரண்டு வருட காலப்பகுதியில் நாள்பட்ட நோய்களுக்கான நிலையான மருத்துவ உதவியை பெற இயலாமல் போனதால் இணை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.

coronavirus, sero survey

Tamil Nadu covid19 second wave Deaths : தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரிய மனித வள இழப்பை உருவாக்கியுள்ளது. மரணம் அடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கைக்கும், அரசு கூறும் எண்ணிக்கைக்கும் பல்வேறு முரண்கள் உள்ளன என்று பல தரப்பில் இருந்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்து நாளிதழ், தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியின் முக்கியமான புள்ளி விபரங்கள் கீழே!

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது Civil Registration System (CRS). அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையான 24,232 மரணங்களைக் காட்டிலும் 6.2 மடங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலபோக்கில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் விளைவாக சி.எஸ்.ஆர். பதிவு செய்துள்ள மரணங்களின் எண்ணிக்கையான 35,807 (2020ம் ஆண்டில் 14,652 மற்றும் மே 2021 வரை 21,115) இழப்புகள் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த மரணங்கள் தொடர்பான புல்லெட்டின்களை விட 47% அதிகமாக உள்ளது.

2.5 அதிகமான மரணங்கள்; சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாம் அலை

ஏப்ரல் 2020 மற்றும் மே 2021க்கு இடையான காலத்தில் கொரோனா வைரஸிற்கு தொடர்பில்லாத மரணங்களை நீக்கிய பிறகு, மரணங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் காட்டிலும் 4.5 மடங்கு அதிகமாக, அதாவது 1,61, 581 மரணங்கள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் (ஏப்ரல் மற்றும் மே 2021) 20158 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சி.ஆர்.எஸ். பதிவு செய்துள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் காட்டிலும் 3 மடங்கு குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அதிகமாக 60,773 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாம் அலையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை (ஏப்ரல் – மே 2021 போது) 20,158 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதய நோய் மற்றும் மாரடைப்பு, நீரிழிவு நோய், வகைப்படுத்தப்படாத, கல்லீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, பெருமூளை-வாஸ்குலர் பிரச்சினைகள் போன்ற காரணங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இறப்புகளிலும் 80% க்கும் அதிகமானவை, இது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 72% மற்றும் 73% ஆக இருந்தது.

COVID தொடர்பான அல்லது இதே போன்ற காரணங்களுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக பிற காரணங்களில் வீழ்ச்சி இருப்பதாகக் கூறுகிறது. உதாரணமாக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 3% ஆக இருந்து 2.6% ஆகவும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 1.9% ஆகவும் குறைந்தது. இரண்டு வருட காலப்பகுதியில் நாள்பட்ட நோய்களுக்கான நிலையான மருத்துவ உதவியை பெற இயலாமல் போனதால் இணை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu covid19 second wave deaths amounted 4 times official covid19 tally

Next Story
Tamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9,118 பேருக்கு கொரோனா உறுதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express