Advertisment

சீமன் vs செம்மண்: திசை திரும்பிய பாலியல் வழக்கு; திருத்தி எழுதிய ஐகோர்ட்

Semen becomes ‘soil’, ’, rape accused gets five-year jail term Tamil News: சிறுமி கற்பழிப்பு வழக்கில், 'சீமன்' (semen) என்பதற்கு பதிலாக 'செம்மண்' (semman) என்று டைப் செய்ததால் தண்டனையில் தப்பிய குற்றவாளியை சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டால் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu crime news in tamil: Typographical error leads to rape accused escape

Tamil Nadu crime news in tamil: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.பிரகாஷ். இவர் கடந்த 2017ம் ஆண்டு 2 1/2 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உணவு வாங்க வெளியே சென்ற குழந்தையின் தாயார், குழந்தை அழுதுகொண்டிருப்பதைக் கண்டுள்ளார். குழந்தையின் பிறப்புறுப்பில் வெள்ளை திரவம் போன்று இருந்ததை கவனித்த அவர், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து புகார் அளித்துள்ளார்.

Advertisment

சிறுமியின் பிறப்புறுப்புகளில் ‘விந்து’ தடயங்கள் இருப்பதைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் அது ‘செம்மண்’அதாவது சிவப்பு மண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், 'குழந்தை விளையாடிய போது அந்த மண் ஒட்டி இருக்கலாம்' என மேற்கோள் காட்டி, குற்றவாளியை வழக்கில் இருந்து விடுவித்தது.

2 வருடங்கள் கழித்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி வேல்முருகன், "இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத ஒரு குழந்தையாகவும், தாய், ஒரு கல்வியறிவற்றகவும் உள்ளனர். இது போன்ற வழக்குகளில் வழக்குளை முறையாக பதியவும், தீர விசாரிக்கவும் வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தாய், குறிப்பாக கிராமப்புறங்களில் படிப்பறிவற்ற ஒரு பெண், இதுபோன்ற வழக்குகளில் அவர்கள் உடனடியாக காவல்துறைக்குச் செல்லமாட்டார்கள். புகாரில் தாமதம் போன்ற தொழில்நுட்பங்களை வலியுறுத்தும்போது வழக்கு மற்றும் நீதிமன்றம் தங்கள் கடமைகளில் தோல்வியடைந்துள்ளன.

தொழில்நுட்ப காரணங்களால் குற்றவாளிகள் துரதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறார்கள் என்பது விசாரணைப் பிரிவின் தரத்திற்கு ஏற்றதாக இல்லை. விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றமும், சில சமயங்களில், தங்கள் மூளையை பயன்படுத்துவதில்லை, மறு விசாரணைக்கு வழிநடத்துவதற்கோ அல்லது நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்களைத் தேடுவதற்கோ உத்தரவு பிறப்பிக்கவில்லை. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பலனை தருகிறது. இது போன்ற வழக்குளில் தொழில்நுட்ப ஆதாரங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாது" என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கு குறித்து பேசிய அவர், "புகாரை விவரிக்கும் போது அந்தப் பெண் வெள்ளை நிற திரவத்தைக் குறிக்கிறார் என்பதையும், ‘விந்து’ என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் 'செம்மண்’என்று எழுதியது தட்டச்சுக்காரர் என்பதையும் காவல் துறையின் புகார் தெளிவாகக் காட்டுகிறது" என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தவறாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை எதிர்தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி எஸ்.பிரகாஷுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி வேல்முருகன் சிறுமிக்கு ரூ .1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Chennai Chennai High Court Tamilnadu News Update Tamilnadu Latest News Madras High Court Crime Rape
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment