குவாரன்டைனில் திமுக எம்பி: சிபாரிசு கடிதம் பெற்றவருக்கு கொரோனா
கொரோனா தொற்றுக்கு ஆளான 64 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிபாரிசி கடிதம் வழங்கிய கடலுார் தி.மு.க. - எம்.பி. ரமேஷ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். .
கொரோனா தொற்றுக்கு ஆளான 64 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிபாரிசி கடிதம் வழங்கிய கடலுார் தி.மு.க. - எம்.பி. ரமேஷ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். .
கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளான 64 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிபாரிசி கடிதம் வழங்கிய கடலுார் தி.மு.க. - எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
சென்னை, அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையத்தை சேர்ந்த 64 வயது பெண், கடந்த ஏப்ரல் 22ம் தேதி தனது சொந்த ஊருக்குத் திரும்பினர். இருப்பினும், அவரின் உடல்நிலை மீண்டும் பலவீனமானதால், அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவரின் மகன் உடனடியாக கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷை தொடர்பு கொண்டு சிபாரிசு கடிதம் பெற்றதால், மறு நாளே ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.
இதற்கிடையே, அப்பெண்ணுக்கும் உடன் சென்ற இருவருக்கும் கொரானோ வைரஸ் தொற்று இருப்பது ஜிப்மர் மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. உடனடடியாக, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரையும் அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
Advertisment
Advertisements
அதன் ஒரு பகுதியாக, கடலுார் எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் டிரைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அல்லது பேசினாலோ அதன் மூலம் வாயிலிருந்தோ மூக்கிலிருந்தோ வைரஸ் இருக்கும் சாத்தியக்கூறுகள் உடைய நீர் துளிகள் வெளிப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil