உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 39, அரசு மருத்துவமனைகளில் 26 என மொத்தம் 65 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,252-ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில்,தொடர்ந்து 8வது நாளாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 918 ஆக பதிவாகியுள்ளது.
குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,005 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,02,038 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 91.72% குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,095ஆக உள்ளது.நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,67,496 -ஆக உள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 60 லட்சத்தைக் (60,77,976) கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89,154 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் வீதம் 86.17%-மாக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 389, சேலம் – 294 , செங்கல்பட்டு –258, திருவள்ளூர் – 198, திருப்பூர் – 172, காஞ்சிபுரம் – 158, வேலூர் – 135, கடலூர் – 84, விழுப்புரம் – 81, திருநெல்வேலி – 77 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,82,014 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,751 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil