/tamil-ie/media/media_files/uploads/2023/08/Sankar-Jiwal-chennai.jpg)
ஆளுனர் மாளிகை புகார் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அந்த நபர் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுனர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது.
அந்த அறிக்கையில், “ராஜ்பவனில் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போக செய்துவிட்டது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 26, 2023
அவசர கதியில் கைது மெற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அளித்துள்ள விளக்கத்தில், “பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுனர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும், அத்துமீறி ஆளுனர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறுவதும் உண்மையல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.