அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்துவதற்கு தயாராகினர். அதற்கு தமிழகம் முழுவது அந்தந்த மாவட்ட காவல் துறையிடம் அனுமதிக்கோரி விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், அப்போது இருந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினர் அனுமதி தர மறுத்தனர்.
இதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினுடைய வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி கேட்டனர். "ஜனநாயக முறையில் நடைபெறவிருக்கும் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பது சரி அல்ல" என்ற அடிப்படையில் இந்த உத்தரவை பெற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் இந்த பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கினார். ஆனால் அதன்பிறகும் அந்த அனுமதியானது மறுக்கப்பட்டது.
மேலும், தற்போது வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்திக்கொள்ளலாம் என்ற சுற்றறிக்கையை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். அந்தந்த மாவட்ட காவல்துறைகளின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சுமுகமாக இந்த பேரணியை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil