வெல்க அண்ணன் உதயநிதி’: ராஜ்யசபா பதவியேற்பில் கோஷமிட்ட திமுக எம்.பி

Tamilnadu News Update : இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Tamilnadu News Update For MLA Udhiyanithi Stalin : திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் அவருக்கு புகரழாரம் சூட்டியுள்ளனா.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் சார்பில் முதல்முறையாக தேர்தரல சந்தித்த உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அரசியல் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருவதால், அவர் அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது திமுக ஆட்சி 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், கட்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான் என்னும் அளவுக்கு அவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் பலரும் அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மாற்றியமைக்கும்போது உதயநிதிக்கு நிச்சயமாக அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் முதலில் எம்.எம். அப்துல்லா பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து அடுத்ததாக கே.ஆர்.என் ராஜேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். இதில் அவர் பதவி பிரமாண உறுதிமொழியை முடித்த பின்பு, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி ஆவர்கள் என்று புகழாரம் சூட்டி தனது பதவி பிரமாணத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் தங்கள் பதவியேற்பின்போது, கலைஞரின் புகழ் ஓங்குக, வாழ்க தளபதி தமிழ் வாழ்க என முழக்கமிட்ட நிலையில், தற்போது கட்சியின் உதயநிதி ஸ்டாலின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை உறுதி செய்யும் வகையிலும், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ளதை போற்றும் வகையிலும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயரை ஒளிக்க செய்துள்ளனர்.

உதயநிதி பெயரை உச்சரித்ததை திமுகவினர் கொண்டாடினாலும், சமூகவலைதளங்களில் இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu dmk mp rajesh kumar has praising udhayanidhi stalin in parliament

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com