தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் சலுகைகள் இல்லை என்று திமுக அரசு ஒவ்வொரு மேடையிலும கூறி வந்தாலும், மறுப்பக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் கட்சியில் பதவிகள் பெற்று வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Advertisment
இதனை குறிப்பிட்டு சொல்லும் வகையில் தற்போது திருச்சியில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் திருச்சியில் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில்,(நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஜூன் 3-ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் திமுக கொடியினை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது மற்றும், கழக ஆக்கப்பணிகள். குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன், என் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் செந்தில் மற்றும் மாநில,மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil