தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (2 நகர மற்றும் 5 புறநகர்) புதிய பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/acf5cc95-bb6.jpg)
இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இன்று துவங்கப்பட்ட பேருந்துகளில் மகளிர் விடியல் பேருந்து, மற்றும் திருப்பூர், சென்னை, தஞ்சாவூர் தேனீர்பட்டி, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/61801772-88c.jpg)
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “21ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகள் தேர்வுகள் நடைபெற உள்ளதாக இருந்தது. தற்போது அதனை வரும் 17ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/697c36d1-3f6.jpg)
தமிழக முதல்வரின் அறிவுரையின்படி எல்லா இடங்களிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் அலுவலகத்தில் உள்ள குழுவின் அறிவுரைப்படி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்