Exit Poll TN Assembly Election 2021 Updates : தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கியது. இதில் தமிழகம் கேரளா, மற்றும் புதுச்சேரியில் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ந் தேதி எண்ணப்படும் நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணுவதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக கூட்டணி முதல்வர் வெட்பாளராள ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியிலும், அமமுகவின் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், மக்கள் நீதி மய்யம கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நாம் தமிழர் சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதி நடைபெறுவதற்கு முன்பாக பல கருத்தக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் இரு கட்சிகளுக்கும் ஆதரவாக வெளியாகிய நிலையில், தேர்தலுக்கு பின் வெளியாகும் கருத்தக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து.
தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்திருந்தாலும், மேற்குவங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால், தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்பதால் தேர்தலுக்கு பின் வெளியாகும் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு நியைவடைய உள்ள நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரவு 7.30 மணிக்கு தேர்தலுக்கு பின் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கருத்தக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் – 152 -164
பாஜக கூட்டணி – 109 -121
காங்கிரஸ் கூட்டணி – 14 – 25
மற்றவை – 0
ஏபிபி – சிவோட்டர் கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் – 152 -164
பாஜக கூட்டணி – 109 -121
காங்கிரஸ் கூட்டணி – 14 – 25
மற்றவை – 0
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் – 152 -164
பாஜக கூட்டணி – 109 -121
காங்கிரஸ் கூட்டணி – 14 – 25
மற்றவை – 0
டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக்கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் – 148
பாஜக கூட்டணி – 129
சிபிஐ – 15
மற்றவை – 0
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் – 128-138
பாஜக கூட்டணி – 138 – 148
சிபிஐ – 11-21
மற்றவை – 0
ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி – 16 – 20
காங்கிரஸ் கூட்டணி – 11 -13
மற்றவை- 0
ஏபிபி சி.வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி – 19 – 23
காங்கிரஸ் கூட்டணி – 06 – 10
மற்றவை- 0
ரிபப்ளிக் நடத்திய கருத்துக்கணிப்பு நிலவரங்கள்
கம்யூனிஸ்ட் கட்சி – 72 – 80
காங்கிரஸ் கட்சி – 58 – 64
பாஜக – 1 – 4
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
கம்யூனிஸ்ட் கட்சி – 104 – 120
காங்கிரஸ் கட்சி – 20 -36
பாஜக – 0 – 04
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி – 75 -85
காங்கிரஸ் கூட்டணி – 40-50
மற்றவை – 01 – 04
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி – 74 -84
காங்கிரஸ் கூட்டணி – 40-50
மற்றவை – 01 – 03
பி.மார்கியூ கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி – 62 -70
காங்கிரஸ் கூட்டணி – 56 – 64
மற்றவை – 04
ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 58 -68
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 160 -170
அமமுக கூட்டணி – 04- 06
மற்றவை – 02
ஏபிபி – சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 64
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 166
மற்றவை – 04
டுடேஸ் சானக்யா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 57
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 175
மற்றவை – 02
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 38 – 54
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 175 -195
ம.நீ.ம கூட்டணி – 0 – 2
மற்றவை – 01 – 07
டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 63
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 165
ம.நீ.ம கூட்டணி – 0
அமமுக கூட்டணி – 0
மற்றவை – 06
பி.மார்க்யூ கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 40 – 65
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 165 -190
ம.நீ.ம கூட்டணி – 0
அமமுக கூட்டணி – 1 – 3
மற்றவை – 00
தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு 160 முதல் 170 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 58 முதல் 68 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு நிலவரங்கள் கூறுகிறது. இதில் புதிதாக போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 0 முதல் 2 தொகுதிகளும், அமமுக கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்தக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
சென்னை திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீமானுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் அவரே முதல்வர் வேட்பாளர் ஆவார்.
தொடர்ந்து சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக கை ஓங்கி இருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
2016-ம் ஆண்டு இந்தியா டுடே-ஆக்சிஸ் அதிமுவு 99 இடங்களிலும், திமுக 132 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. இதில் ஸ்பிக் நியூஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், 2016 இல் வெற்றியாளரை சரியாகக் கணித்துள்ளது. இதில் அதிமுகவுக்கு 142 இடங்களையும், கொடுத்தது, திமுகவுக்கு 87 இடங்களையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், சாணக்யா கருத்துக் கணிப்பு திமுக 140 இடங்களில் வெற்றி பெறும் என்றும், என்டிடிவி கருத்துக் கணிப்பு திமுகவுக்கு இந்த தேர்தல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. ஏபிபி வெளியிட்ட கருத்துக் கணிப்பு திமுக 132 இடங்களிலும், ஜெயலலிதாவின் அதிமுக 95 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது
2016 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில், அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போது திமுகவின் கருணாநிதி, மற்றும் அதிமுகவின் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவுக்கு முன்னதாக டைம்ஸ் நவ்-சிவோட்டர் நடத்திய கருத்துக்கணி முடிவில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளது. இதில் ஆளும் அதிமுக-பாஜக கூட்டணி வெறும் 49 இடங்களை மட்டுமே பெறும் என்றும், அறிமுக வேட்பாளரான கமல்ஹாசன் தலைமையிலான எம்.என்.எம் கூட்டணி மற்றும் டி.டி.வி தினகரனின் ஏ.எம்.எம்.கே ஆகியவற்றுக்கு தலா மூன்று இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் கடந்த 2016 ஆம் ஆண்டைப் போலவே, 11 அமைச்சர்களின் தொகுதிகளில் இந்த முறையும் 80% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் சி விஜயபாஸ்கர் தொகுதியில் இந்த முறை வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது.
ஆனால் கே.சி கருப்பண்ணன், எம் ஆர் விஜயபாஸ்கர், ஆர் காமராஜ், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, கே பி அன்பழகன், கே ஏ செங்கொட்டையன், வி சரோஜா, கேசி வீரமணி, ஓ எஸ் மணியன் மற்றும் சேவூர் எஸ் ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் 80% க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.