Advertisment

Tamilnadu Election Results 2019: 'பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamilnadu Election Results 2019: வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Election Result Updates

Lok Sabha Election Result Updates

Tamilnadu Election Results 2019: மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவழியாக வெளியாகிவிட்டன.

Advertisment

இந்தியாவில் பா.ஜ.க-வும் தமிழகத்தில் திமுக கூட்டணியும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. சட்ட மன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரை 13 இடங்களில் திமுக-வும், 9 இடங்களில் அதிமுகவும் வென்றிருக்கின்றன.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.

Live Blog

Tamil Nadu Election Results 2019 Reactions

வெளியானது மக்களவைத் தேர்தல் முடிவுகள் - அடுத்து என்ன?



























Highlights

    19:39 (IST)24 May 2019

    303 அதிகாரப்பூர்வமானது

    மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றிப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக 303 இடங்களில் தனித்து வென்றிருக்கிறது.

    19:26 (IST)24 May 2019

    பிரதமர் மோடியின் ராஜினாமா ஏற்பு

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமைக்கும் வரை, ஆட்சியை தொடருமாறும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    17:11 (IST)24 May 2019

    முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்

    மே 28,29,30 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம்.

    வரும் 30ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பங்கேற்கின்றனர்.

    16:21 (IST)24 May 2019

    புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்க அழைப்பு

    டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்க, கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    15:56 (IST)24 May 2019

    ஜனாதிபதியை சந்திக்கும் மோடி

    டெல்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.

    15:14 (IST)24 May 2019

    மக்களவை தேர்தல் வாக்கு சதவிகிதங்கள்

    14:31 (IST)24 May 2019

    திருமாவளவன் பேட்டி

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பின் பேட்டியளித்த தொல்.திருமாவளவன், ”நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர். அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என முன்பே கூறினோம். தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது. 

    வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தது, ஐயத்தை ஏற்படுத்தியது.  ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள்” என்றார்.

    14:00 (IST)24 May 2019

    திருமாவளவன் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

    13:20 (IST)24 May 2019

    டெல்லியில் நாளை பாஜக எம்.பி-க்கள் கூட்டம்

    மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.பி-க்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எம்.பி-க்களும் கலந்துக் கொண்டு ஒருமனதாக மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    12:55 (IST)24 May 2019

    ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து

    ஆந்திர முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

    12:49 (IST)24 May 2019

    மோடி பதவியேற்பு

    மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 26-ம் தேதி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி. 

    12:10 (IST)24 May 2019

    முடிந்ததை செய்துள்ளோம் - கமல்

    பாஜக-வின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம் . தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை, என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

    12:10 (IST)24 May 2019

    முடிந்ததை செய்துள்ளோம் - கமல்

    பாஜக-வின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம் . தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை, என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

    12:02 (IST)24 May 2019

    ராஜன் செல்லப்பா பேட்டி

    தினகரன் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது, தினகரனுக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமைந்துள்ளது

    11:46 (IST)24 May 2019

    Election Results 2019

    மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி, தான் வெற்றி பெற்ற சான்றிதழை கலைஞர் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். 

    Tamil Nadu Election Results 2019: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க.
    Tamil Nadu Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment