Advertisment

சிதம்பரத்தில் 3219 வாக்கு வித்தியாசத்தில் திருமா வெற்றி: ‘எனக்கு எதிராக ரூ 100 கோடி கொட்டி செலவழித்தார்கள்’

Thol Thirumavalavan: இந்த தீர்ப்பு தமிழ்மண் தமிழ்மண் தான், இங்கே சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news today

Tamil nadu news today

Tamil Nadu Lok Sabha Election Results 2019: சிதம்பரத்தில் பெற்ற வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என திருமாவளவன் குறிப்பிட்டார். மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் இடமில்லை என தமிழக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Advertisment

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கை வருமாறு:

‘சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. அங்குலம் அங்குலமாக பகை சக்தியை விரட்டியடித்து இந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம். எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இந்த வெற்றி அறத்தின் வெற்றி, மக்களுடைய வெற்றி. இந்த வெற்றியை எனக்கு வாரி வழங்கிய நான் உயிரினும் மேலாக நேசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே நள்ளிரவை தாண்டி முடிவு அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியாகத் தான் இருக்கும். ஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையே சிதம்பரம் தொகுதியின் மீது தான் இருந்தது. சனாதன சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். கட்சிகளும் சாதிவெறி சக்திகளும் கோடி கோடியாக கொட்டி இரைத்தார்கள், எனக்கெதிரான அவதூறு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டார்கள்.

அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களும் மிகக்கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டித்தந்திருகிறார்கள். அண்ணன் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த யாவருக்கும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இந்த வெற்றி அறத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களுடைய வெற்றி. ஏற்கனவே நாங்கள் அறிவித்ததை போல சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். 38 இடங்களில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதே போல சட்டமன்ற தேர்தலிலும் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமளவு வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் எடுபடவில்லை. தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண் தமிழ்மண் தான், இங்கே சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது.’. இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.

 

Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment