வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த நத்தம் விஸ்வநாதன்; தேர்தல் அதிகாரிகளிடம் புகார்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்

Tamil Nadu Elections 2021 : AIADMK candidate Natham R Viswanathan distributes money to the voters

Tamil Nadu Elections 2021 : தமிழகத்தில் வருகின்றார் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நேற்று தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். முன்னாள் தமிழக அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார். நத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தனர். ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் தரும் 18 நொடி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான எம் விஜயலட்சுமி இது தொடர்பான தகவல்களை வழங்க ரிட்டனிங் ஆஃபிசருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நத்தம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதி துணை காவல் ஆய்வாளர் எம்எஸ் முத்துசாமி இந்த வழக்கு தொடர்பான சிஎஸ்ஆர் நகலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu elections 2021 aiadmk candidate natham r viswanathan distributes money to the voters

Next Story
களத்தில் குதித்த சகாயம் பேரவை: கொளத்தூர் உள்பட 20 தொகுதிகளில் போட்டி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com