Advertisment

Tamil Nadu Elections 2024 polling updates: தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2024 Lok Sabha Election Phase 1 : மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது: தேர்தல் தொடர்பான லைப் அப்டேட்டுகளுக்கு இந்த லிங்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election-Commission-of-India

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024

 India Lok Sabha Election 2024 Phase 1 Voting Updates: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க அரசின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்வது யார் ? என்பதை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

Advertisment

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102  தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுபோல் கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை  தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு,  பாஸ்போர்ட்  உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுபோல முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க  வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை வீட்டில் இருந்தே அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் மாவட்டத்தின் பெயர், தொகுதியின் பெயர் மற்றும் வாக்குச்செலுத்தும் வாக்குச்சாவடியின் பெயரை கொடுத்தால், வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை நமக்கு சொல்லும்.

Read in english 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

 

  • Apr 20, 2024 04:57 IST
    தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது - சத்யபிரத சாகு 

    தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

    “இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். எனவே வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் உயரும்.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீதமும், தர்மபுரியில் 75.44 சதவீதமும், சிதம்பரத்தில் 74.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    சென்னையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெயிலை தவிர்க்க மாலை 3 மணிக்கு பிறகு மக்கள் வந்து அதிகமாக வாக்களித்துள்ளனர். மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. என்றாலும், முழுமையான வாக்குப்பதிவு அளவு நாளை (இன்று) காலை 11 மணிக்கு மேல் தெரிய வரும்.

    கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது அதிகபட்சமாக தருமபுரியில் 82.41 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.07 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

    மறு தேர்தல் நடத்துவது பற்றிய தகவல்கள் நாளைதான் தெரிய வரும். அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். பின்னர் அதுபற்றி முடிவு செய்யப்படும். மறு தேர்தலுக்கு ஒரு கட்சி மட்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெறப்படும்.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மிகவும் சுமுகமாகவும், அமைதியாகவும், பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சின்னச்சின்ன வாக்குவாதங்கள்தான் சில இடங்களில் நடந்தன. பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

    வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடும் நன்றாக இருந்தது. மிகக் குறைவான இடங்களில் மட்டும் மாற்று எந்திரங்கள் வைக்கப்பட்டன. சில இடங்களில் பழுது பார்த்து சரி செய்யப்பட்டன.

    தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டது பற்றி சற்று ஆழமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதற்கான சூழ்நிலை எது என்பதை கண்டறிய வேண்டும். வாக்காளர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.” என்று கூறினார்.



  • Apr 20, 2024 00:30 IST
    தருமபுரி தொகுதியில் 81.40% வாக்குப்பதிவு

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தருமபுரி தொகுதியில் மாலை 7 மணி வரை 75.44% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 81.40% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 19, 2024 21:38 IST
    சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததைத்  தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு  செல்லப்படுகின்றன. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Apr 19, 2024 21:33 IST
    21 மாநிலங்களில் இரவு 7 மண்இ வரை வாக்குப்பதிவு சதவீதம்

    நாடு முழுவதும் இன்று ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தேர்தலில், இரவு 7 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் வருமாறு:

    per



  • Apr 19, 2024 21:28 IST
    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை... 40 தொகுதிகளிலும் வெல்வோம் - திருமாவளவன்

    வாக்குப்பதிவுக்கு பிறகு சிதம்பரம் வி.சி.க வேட்பாளர் திருமாவளவன் பேட்டி; “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதால் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.



  • Apr 19, 2024 21:04 IST
    மக்களவைத் தேர்தலில் 44 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அதிக அளவு வாக்குகள் பதிவு

    மக்களவைத் தேர்தலில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 3 தொகுதிகளிலும் இந்த முறை அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைத் தேர்தலில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • Apr 19, 2024 19:33 IST
    தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவு

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.36% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தருமபுரியில் 75.44%

    சிதம்பரத்தில் 74.8%

    திருவள்ளூர் 71.87

    வட சென்னை 69.26

    மத்திய சென்னை 67.35

    ஸ்ரீபெரும்புதூர் 69.79

    அரக்கோணம் 73.92

    காஞ்சிபுரம் 72.99% வாக்குகள் பதிவாகி உள்ளன.



  • Apr 19, 2024 18:48 IST
    காஞ்சிபுரம் ஏகனாபுரத்தில் 21 வாக்குகள் மட்டுமே பதிவு

    பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏகனாபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் உல்ள ஏகனாபுரம் வாக்குச்சாவடியில் இதுவரை 21 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 19, 2024 18:45 IST
    மத்திய சென்னை தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் தி.மு.க திட்டமிட்டு நீக்கியுள்ளது - வினோஜ் பி. செல்வம்

    மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம், மத்திய சென்னை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வரை தி.மு.க திட்டமிட்டு நீக்கியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.



  • Apr 19, 2024 18:24 IST
    மக்களவைத் தேர்தல் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு

    தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. 



  • Apr 19, 2024 17:19 IST
    தவறான தகவல் - வதந்தி பரப்பியவரிடம் விசாரணை

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர். எம்.கே.பி நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    வாக்குச்சாவடி முன்பு அ.தி.மு.க-வினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடனத்தினர். வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர், தேர்தல் அதிகாரி மின்னணு இயந்திரத்தை சரிபார்த்த போது கோளாறு இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியதாக அ.தி.மு.க பிரமுகர் விஜய் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Apr 19, 2024 16:55 IST
    சிறார் ஆபாசப் படம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை 

    சிறார் ஆபாசப் படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, "அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் வந்து தானாகவே பதிவிறக்கம் ஆகியுள்ளது. அவர் வேறு யாருக்கும் அனுப்பவில்லை" என இளைஞர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

    "யார் அந்த வீடியோவை அனுப்பியது என்பதை அவர், விசாரணையில் கூறவில்லை. இது அவரின் வன்ம மனதையே பிரதிபலிக்கிறது. அவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது" நீதிபதிகள் தெரிவித்தனர். மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 



  • Apr 19, 2024 16:32 IST
    நடிகர் சூரி புகார்

    "வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. மனைவிக்கு ஓட்டு உள்ளது, எனது பெயர் மட்டும் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. எல்லோரும் வாக்களியுங்கள். ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" என்று நடிகர் சூரி புகார் கூறினார். 



  • Apr 19, 2024 15:27 IST
    திருவண்ணாமலை மோத்தக்கல் ஊராட்சியில் தேர்தல் புறக்கணிப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மோத்தக்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார் தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலனி பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியள்ள மக்கள் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.



  • Apr 19, 2024 15:25 IST
    மதுரை அருகே 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

    மதுரை அருகே கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் ஆகிய 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. கேரளாவை சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் இறைச்சி கழிவுகளை சுத்திகரிப்பதால் பாதிப்பு என புகார்  தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர்களை மதுரை எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப்படுத்த தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Apr 19, 2024 15:23 IST
    போலீசார் - திமுகவினர் இடையே வாக்குவாதம்

    கோவை பி.என்.புதூர் பகுதியில் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் கூட்டம் கூடியதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக‌ தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



  • Apr 19, 2024 15:20 IST
    உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் : நடிகர் விஜய்

    நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



  • Apr 19, 2024 14:50 IST
    புதுச்சேரியில் பசுமை வாக்குச்சாவடி

    புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பச்சை பசேல் என பசுமை வாக்குச்சாவடி அமைத்து, வாக்காளர்களுக்கு கூழ், மோர், பதநீர் என அளித்து சிறப்பான உபசரிப்பு அளிக்கப்படுகிறது!



  • Apr 19, 2024 14:30 IST
    தமிழகம்: 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குப்பதிவு

    மக்களவை தேர்தல்  பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. 



  • Apr 19, 2024 13:54 IST
    தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும் : வி.கே.சசிகலா

    மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும்" வாக்களித்த பிறகு பேட்டி அளித்த வி.கே.சசிகலா எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.



  • Apr 19, 2024 13:52 IST
    அனைவரும் வாக்களிக்க வேண்டும் - நடிகர் கார்த்தி

    தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் கார்த்தி "அனைவரும் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.



  • Apr 19, 2024 13:42 IST
    எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு : வியாசர்பாடியில் தி.மு.க, அ.தி.மு.க தர்ணா

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



  • Apr 19, 2024 13:42 IST
    எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு : வியாசர்பாடியில் தி.மு.க, அ.தி.மு.க தர்ணா

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



  • Apr 19, 2024 13:42 IST
    எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு : வியாசர்பாடியில் தி.மு.க, அ.தி.மு.க தர்ணா

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



  • Apr 19, 2024 13:42 IST
    எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு : வியாசர்பாடியில் தி.மு.க, அ.தி.மு.க தர்ணா

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



  • Apr 19, 2024 13:42 IST
    எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு : வியாசர்பாடியில் தி.மு.க, அ.தி.மு.க தர்ணா

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



  • Apr 19, 2024 13:10 IST
    புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் கூல் சுரேஷ்

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் அல்லது விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு எனது ஆதரவை தெரிவிப்பேன் என்று கூறியுள்ள நடிகர் கூல் சுரேஷ், விரைவில் கூல் சுரேஷ் கட்சி (சி.எஸ்.கே) தொடங்கி பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.



  • Apr 19, 2024 13:05 IST
    வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் : மணிப்பூரில் பரபரப்பு

    மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில, உள்ள தமான்போக்பி என்ற பகுதியில், ஆயுதத்துடன் வந்த கும்பல் சராமாரியாக தாக்குதல் நடநத்தியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வாக்களிக்க வந்தவர்கள் தெறித்து ஓடிய வீடியோ காட்சி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



  • Apr 19, 2024 12:58 IST
    வாக்களிக்க பொதுமக்களை ஜீப்பில் அழைத்துச்செல்லும் வனத்துறையினர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வனத்துறையினர் பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு பத்திரமாக ஜீப்பில் அழைத்துச் செல்கின்றனர். 



  • Apr 19, 2024 12:55 IST
    வெளியூர் ஆட்களை பயன்படுத்துவதாக பா.ஜ.க மீது தி.மு.க புகார்

    தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் வெளியூர் ஆட்களை பா.ஜ.க பயன்படுத்துவதாக தி.மு.க புகார் அளித்துள்ளது.



  • Apr 19, 2024 12:51 IST
    நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய்

    கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தற்போது வாக்களிக்க வேண்டும் எனபதற்காக இந்தியா திரும்பிய நிலையில், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

    அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகை திரிஷா.



  • Apr 19, 2024 12:33 IST
    பா.ஜ.க பயன்படுத்துவதாக தி.மு.க புகார்

    கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் வெளியூர் ஆட்களை பா.ஜ.க பயன்படுத்துவதாக தி.மு.க புகார். 



  • Apr 19, 2024 12:31 IST
    வெள்ளை சட்டை: வாக்கு செலுத்திய விஜய்

    சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்த நடிகர் விஜய். நடிகர் அஜித் வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்களித்தார். இதுபோல நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து வாக்களிக்க வந்துள்ளார். 

     



  • Apr 19, 2024 12:05 IST
    கையில் உள்ள இந்த மை, இந்திய குடிமகனின் அழகான சின்னம்: ஆளுநர் ரவி

    ”இது ஜனநாயகத்தின் திருவிழா. நான் வாக்கு செலுத்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கையில் உள்ள இந்த மை,  இந்திய குடிமகனின் அழகான சின்னம். இன்று வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள், முழு உத்வேகத்துடன் வாக்களிக்க வேண்டும்- ஆளுநர் ரவி 



  • Apr 19, 2024 11:45 IST
    வாக்கு செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி

    சென்னை, வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.



  • Apr 19, 2024 11:38 IST
    11 மணி: வாக்குப்பதிவு நிலவரம்

    கடலூர் - 24.72% ,  தேனி - 25.75% , திருச்சி -  22.77%,  மயிலாடுதுறை -  23.01% ,சேலம் - 28.57%, கிருஷ்ணகிரி - 27.58%, வேலூர் - 23.46%. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. 



  • Apr 19, 2024 11:36 IST
    வாக்களித்த நல்லகண்ணு, செல்லூர் ராஜூ

    சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.



  • Apr 19, 2024 11:34 IST
    வாக்களித்த நடிகை திரிஷா

    சென்னை பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்த நடிகை திரிஷா. 



  • Apr 19, 2024 11:09 IST
    வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருடன் அவரது மனைவியும் வந்திருந்தார். உதயநிதி மனைவியும் அவரைத் தொடர்ந்து வாக்களித்தார். 

     



  • Apr 19, 2024 11:03 IST
    சீமான் முதல் திருமா வரை : வாக்களித்த அரசியல் தலைவர்கள்

    மனைவியுடன் வரிசையில் நின்று அமைச்சர் உதயநிதி வாக்களிப்பு. சீமான் வாக்களித்தார். அரியலூரில் வாக்களித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.



  • Apr 19, 2024 10:46 IST
    வாக்களித்த பழனிவேல் தியாகராஜன், திருச்சி சிவா

    மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். திருச்சி ஜான் வெஸ்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் திருச்சி சிவா. 



  • Apr 19, 2024 10:42 IST
    விஜய் சேதுபதி வாக்களிக்கும் வீடியோ

    சென்னை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய விஜய் சேதுபதி. 



  • Apr 19, 2024 10:39 IST
    வாக்கு செலுத்திய அன்பில் மகேஷ்

    தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.   



  • Apr 19, 2024 10:28 IST
    ஏனாதவாடி கிராமத்தில் வாக்களித்த மக்கள்



  • Apr 19, 2024 10:18 IST
    கமல் முதல் விஜய் சேதுபதி வரை வாக்களித்த பிரபலங்கள்

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். சென்னை சூளைமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் கவிஞர் வைரமுத்து. விஜய் சேதுபதி,  இயக்குநர் பாரதிராஜா, நடிகை நமிதா, நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.  



  • Apr 19, 2024 10:15 IST
    நீங்கள் வாக்களித்தது போல நானும் வாக்களித்தேன்-இளையராஜா

    ” நாம் எல்லோரும் இந்திய குடிமக்கள். நமக்கு வாக்கு அளிக்க உரிமை உண்டு. நீங்கள் வாக்களித்தது போல நானும் வாக்களித்தேன்”- இளையராஜா



  • Apr 19, 2024 10:10 IST
    'பஸ் வசதி கூட செய்யாவிட்டால் எப்படி 100% ஓட்டு போட முடியும்?': கிளாம்பாக்கத்தில் விடிய விடிய தவித்த பயணிகள்

    சொந்த ஊருக்கு வாக்கு செலுத்த செல்ல பேருந்துகள் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் கிளாம்பாக்கத்தில் மக்கள் காத்திருக்கும் வீடியோக்களை நெட்டீசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.  



  • Apr 19, 2024 09:57 IST
    ஒரு புல்லட்டை விட வலிமையானது உங்கள் வாக்கு’: நடிகர் சிவகார்த்திகேயன்

    ” வாக்கு நமது உரிமை என்பது போல. வாக்கு செலுத்துவது நமது கடமை. இந்த முறை முதல் முறையாக வாக்கு செலுத்தும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் வாக்கு செலுத்துங்கள். வீட்டில் கூட இது தொடர்பாக விவாதிக்க வேண்டாம். ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல் ‘ ஒரு புல்லட்டை விட வலிமையானது உங்கள் வாக்கு’. எனது ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” - நடிகர் சிவகார்த்திகேயன்



  • Apr 19, 2024 09:40 IST
    ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்

    சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேர்தல் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருவதாக கூறினார்.  



  • Apr 19, 2024 09:29 IST
    வாக்கு செலுத்திய கனிமொழி

    சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் கனிமொழி. 



Elections 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment