சென்னையில் நடைபெற்ற தொழில் துறை மாநாட்டின் போது, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலுக்கான பிரத்யேக கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் ஏராளமான அரசு சார் மற்றும் தனியார் அமைப்புகள் ஈடுபட்டு கொண்டு வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்களை உற்பத்தி ஆலை, ராணுவ உடை தயாரிப்பு, ஆவடி, திருச்சி ஆகிய இடங்களில் ராணுவத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் உற்பத்திப் பிரிவுகள் என பல்வேறு பிரிவுகளை செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு உதவக்கூடிய மின்னணு வன்பொருள் துறை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது என்றும் ஆசிய நாடுகளில் விரும்பி முதலீடுகளைச் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் கூறினார்.
வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் முதலீடுகள் மட்டுமின்றி அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் ஈர்ப்பால் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.