பண மதிப்பிழப்பு மத்திய அரசின் இரக்கமின்மை : தமிழக நிதியமைச்சர் கடும் விமர்சனம்

Tamilnadu News : மக்கள் அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு முன்னாள் அவர்களை யாரால் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் இருந்து வருகிறார்கள்,

Janani Nagarajan

Tamilnadu Finance Minister PTR Speech : இந்தியாவில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு (2016 நவம்பர்) கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால், மக்கள் இன்று வரை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன; இந்த முடிவு அரசாங்கத்தின் இரக்கமின்மையை காட்டுகிறது” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் நேற்று நடைபெற் ‘பணமதிப்பு நீக்கம் – இந்திய நாணய பரிசோதனை குறித்த பார்வை’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் கூறுகையில்,

“பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் மிக தெளிவாக பேசப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 வருடங்களுக்கு முன்பு வந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பல்வேறு ஆதரவு கருத்துகள் வந்தது. ஆனால் அப்படி கருத்துகள் அளித்த யாவரும் பொருளாதார நிபுணர் கிடையாது. இந்த திட்டம் மாபெரும் தவறான முடிவு. இது சாமானிய மக்களுக்கு பெருமளவு பாதிப்பைக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று; 5 ஆண்டுகள் ஆனபிறகும் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் இன்றும் தீரவில்லை; உலகில் வேறு எந்த நாட்டிலும் புதிய பதிவுகள் அச்சிடப்படாமல் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பழைய பதிவுகளை சேகரித்த பிறகு அவற்றை சிதைக்காமல் இதுபோன்ற செயல்களை யாரும் செய்ததில்லை. இது அரசாங்கத்தின் இரக்கமின்மையை காட்டுகிறது” என்று கூறினார்.

மேலும், “மக்கள் அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு முன்னாள் அவர்களை யாரால் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் இருந்து வருகிறார்கள், அவர்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள்; அரசியல் சூழலை மேம்படுத்துவதற்கான சரியான முடிவு, அரசியல்வாதிகளின் தரத்தை விட, சரியான விவாதங்கள், சரியான சமூக உரையாடல்களை சரியான சூழலில் சரியாக பெறுபவர்களுடன் நடத்துவது.

சமூகப் பேச்சின் தரத்தை மேம்படுத்துவதற்குப் பெரும் பங்களிப்பாகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பிராந்திய மொழிகள் வரை மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகங்கள் மூலம் சமூக மேம்பாட்டிற்கு உதவ முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்காது என்றும், கருப்புப்பணத்தையும் ஊழலையும் ஒழிக்க உதவும் சிறந்த முடிவு என்றும், ஒன்றிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம்.

இதையடுத்து ஜி.எஸ்.டி போன்ற முடிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தையே மிகவும் மோசமாக பாதிக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் மக்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu finance minister ptr speech about demonetisation

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com