Advertisment

தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்; மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

2022-ம் ஆண்டில் தமிழ்நாடு 64 ஆயிரத்து 105 சாலை விபத்துகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க்கில் அதிக சாலை விபத்துகளை பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Accident

தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்; மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 61 ஆயிரத்து 312 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சாலை விபத்துகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்தனர். 4 லட்சத்து 43 ஆயிரத்து 366 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisment

2022-ம் ஆண்டில் தமிழ்நாடு 64 ஆயிரத்து 105 சாலை விபத்துகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க்கில் அதிக சாலை விபத்துகளை பதிவு செய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் சாலை விபத்துக்களால் 17 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்தனர்.

2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 312 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சாலை விபத்துகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்தனர். 4 லட்சத்து 43 ஆயிரத்து 366 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 64 ஆயிரத்து 105 விபத்துகள் என்பது மொத்த விபத்துகளில் 13.9% ஆகும். இதைத் தொடர்ந்து 54 ஆயிரத்து 432 விபத்துகளுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கையில், தமிழ்நாடு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 2022-ம் ஆண்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2018-ம் ஆண்டில்  22 ஆயிரத்து 961 விபத்துகளும், 2019-ல் 21 ஆயிரத்து 489 விபத்துகளும், 2020-ல் 18, ஆயிரத்து 372 விபத்துகளும், 2021-ல் 16 ஆயிரத்து 869 விபத்துகளும், 2022-ல் 18 ஆயிரத்து 972 விபத்துகளும் நடந்துள்ளன.

இருப்பினும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட 17 ஆயிரத்து 884 இறப்புகள் மொத்த உயிரிழப்புகளில் 10.6% ஆகும். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 22 ஆயிரத்து 595 இறப்புகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

2022-ம் ஆண்டிற்கான தரவுகளின்படி, விபத்துகளுக்கான காரணங்களைப் பொறுத்தவரை, 67% விபத்துக்கள் நேரான சாலைகளில் நடந்துள்ளன. வாகனங்களின் வேகம் திறந்த பகுதிகளில் நேரான சாலைகளில் அதிகமாக உள்ளது. இது அதிக சதவீத சாலை விபத்துக்கள், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சாலைப் பிரிவுகள் மொத்த விபத்துக்களில் 2% ஆகும்.

இது குறித்து ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,  “தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகள் சந்திப்புகள் மற்றும் மீடியன்கள் இல்லாத இடங்களுக்கு அருகில் தான் நடக்கிறது. உதாரணமாக, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மதுரவாயல், திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட முக்கியமான சந்திப்புகள் உள்ளன. ஆனால், இந்த சந்திப்புகளில் எந்தவிதமான மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதையும் இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிக கட்டணம் வசூலித்தாலும், அந்தத் தொகையை மாநிலத்தில் தேவையான சாலைப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வடிவில் திரும்பப் பெறவில்லை” என்று அவர் விளக்கினார்.

நடைபாதை வசதியும் இல்லை. சில இடங்களில், உயர்மட்ட சாலைகள் அமைப்பதற்கான பரிந்துரையைக் காரணம் காட்டி, மேம்பாலங்களுக்கான முன்மொழிவுகள் கைவிடப்பட்டுள்ளன. இவை முடிவடையும் வரை விபத்துகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment