அடுக்குமாடி குடியிருப்பு பதிவு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துறை தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கட்டிடநிறைவு சான்று பெறப்பட்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடிநிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனைஆவணமாக பதிவு செய்ய வேண்டும். கட்டிடம் நிறைவு சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரத்தை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளை அணுகி பெற்று தங்களின் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: என்.எல்.சி-க்கு நிலம் வழங்கிய அடிப்படையில் வட இந்தியர்கள் வேலை பெற்றது எப்படி? அன்புமணி ராமதாஸ் கேள்வி
இதுவரை புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக ஒருவர் வீடு வாங்குகிறார் என்றால் யுடிஎஸ் பதிவு கட்டணம் 9 சதவீதம் மற்றும் கட்டுமான பதிவு கட்டணம் 4 சதவீதம்செலுத்தும் நிலை இருந்தது. தற்போது இந்தப் பதிவு கட்டணம் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“