/tamil-ie/media/media_files/uploads/2021/12/Paratto.jpg)
Tamilnadu News Update : பொதுவாக உணவகங்களில் சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை உணவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படியோ சோதனை நடைபெற்றாலும் ஒரு சில உணவகங்களில் முறைகேடாக உணவு தயாரிப்பது, நேற்றைய உணவு பொருட்களை சூடு செய்து கொடுப்பது என சில வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நெல்லையில், விற்பகை ஆகாத பரோட்டாகளை ப்ரிஜில் வைத்து விற்பனைக்கு பயன்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் தென்பகுதியில் முக்கியமான மாநகராட்சிகளில் ஒன்றான நெல்லையில், உணவகங்களில் விற்பனை ஆகாத பரோட்டாக்களை ப்ரிஜில் வைத்து அடுத்தநாள் தண்ணீரில் நனைத்து விற்பனைக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ பாதிவும் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பாளைங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், பிரிஜில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ பரோட்டா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மேலபாளையத்தில், 10 கிலோவும், அடுத்தடுத்த கடைகளில் ஆய்வு செய்ததையும் சேர்த்து சுமார் 50 கிலோ பழைய பரோட்டாகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த பரோட்டாக்களுடன் சேர்த்து, வேதிப்பொருள் அடங்கிய கலர் பொடிகள் மற்றும் அஜினோமோட்டோ ஆகியவற்றை அதிகரிககள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பழைய உணவுகளை கொடுத்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உணவகங்கள் மீது கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.