கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப் பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது, குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றது.
ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“