எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி: சில நினைவுகள்

Tamilnadu News Update : ற்போது எம்ஜிஆர் இறந்து 34 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாளை அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

Tamilnadu Former CM MGR Update : தமிழ் சினிமாவிலும் தமிழக மக்கள் நெஞ்சங்களிலும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் டாக்டர் எம்ஜிஆர். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்ஜிஆர், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், என மக்களால் போற்றப்படுகிறார். மேலும் இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும், எம்ஜிஆாரின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அந்தஅளவிற்கு மக்களின் மனதில் தற்போதுவரை நீங்காத இடம் பிடித்துள்ள எம்ஜிஆர் தொடர்ச்சியாக 3 முறை முதல்வராக வெற்றி பெற்றிருந்தார். மேலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர். சினிமா மற்றும் அரசியலில் தனது ஆளுமையை செலுத்திய எம்.ஜி.ஆர் இறந்து நாளையுடன் 34 வருட்ங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து தகவல் தற்போது வைராலாகி வருகிறது.

கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி சென்னை கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக பிரதமர் ராஜூகாந்தி தமிழகம் வந்திருந்த நிலையில், முதல்வர் எம்ஜிஆர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆயத்தமானார். அதற்கு முன்பு சில நாட்களாக எவ்வித நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாத அவர், பிரதமர் வருகிறார் என்பதற்காக நேரு சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். டிசம்பர் 22 அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் ராஜூகாந்தி சிலை திறந்து வைத்து பேசி முடித்தார். அதன்பிறகு பேசிய எம்ஜிஆர் சற்று சோர்வாக இருந்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து தளர்வுடனே காணப்பட்ட அவர், 23-ந் தேதி இரவு ராமாவரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லாத்தில் உறங்கியுள்ளார். அதன்பிறகு நள்ளிரவில் கழிப்பறை சென்று வந்த அவர் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீர் குடித்துவிட்டு படுத்த எம்ஜிஆர் அதன்பிறகு மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து ராமாவரம் இல்லத்திற்கு வந்த மருத்துவர்கள் எம்ஜிஆருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதிகாலை 3. மணிக்கு அவர் உயிர் பிரிந்ந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஏழைகளின் ஒளிவிளக்காக இருந்த எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மரணமடைந்தார். எம்ஜிஆர் மறைந்த நாளான அன்று ஆளுநர் குரானா தலைமையில் குடியரசு தலைவர் ஆர்.வெங்ட்ராமன் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தை தொடங்கி வைக்க இருந்தார்.

அதன்பிறகு எம்ஜிஆர் மறைவு செய்தி கேட்டு அவரது மனைவி ஜானகி அம்மாள் மயங்கி விழுந்த நிலையில், ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்துள்ளார்., மேலும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அதிகாலை சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு எம்ஜிஆரின் மரண செய்தி தெரிவிக்கப்பட்து. அவர் அங்கிருந்து நேராக ராமாவரம் தோட்டத்திற்கு சென்றுஅஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு எம்ஜிஆரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்படத்தில வைக்கப்பட்டது.

தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் நீங்க இடம்பிடித்து மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கி்றன எம்ஜிஆருக்கு நேரு சிலை திறப்பு நிகழ்ச்சியே அவர் பங்கேற்ற கடைசி நிகழச்சியாக அமைந்தது. முதல்வரின் மறைவையெட்டி அப்போது திமுகவின் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இலங்கையை பூர்விகமான கொண்ட எம்ஜிஆரின் மரண செய்தி கேட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இரங்கல் செய்தியை அனுப்பியிருந்தார்.

மேலும் அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. தற்போது எம்ஜிஆர் இறந்து 34 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாளை அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu former cm mgr last function many memories update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com