மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி, அவர்களை நோகடிக்கும் வகையில் இருந்த வழிமுறையை தடுக்கும் விதத்தில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிருத்தத்தை அரசிதழில் இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய சட்டதிருத்தத்தின் கீழ், இனி மாணவர் சேர்க்கையின்போது காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் பயன்படுத்தப்படாது.
தமிழக அரசு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதனால், உயர் கல்வி மாணவர் சேர்க்கையின்போதும் இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என்று அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டே, விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றவை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.