/indian-express-tamil/media/media_files/2025/10/17/diwali-holiday-2025-10-17-21-49-42.jpg)
இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (17.10.2025) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பி வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 21-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் பணி நிமித்தமாக வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அக்டோபர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 22-ம் தேதி பணி நாள் என்பதால், உடனடியாக திரும்ப வேண்டும் என்ற நிலை இருந்ததால், பலரும் சிரமத்திலும் வருத்தத்திலும் இருந்தனர்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.