scorecardresearch

மெரினாவில் தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல 2 நாள் தடை

ஜனவரி 25- 26ஆம் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மெரினாவில் தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல 2 நாள் தடை

குடியரசு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் அணிவகுப்பு நடக்க உள்ளதால், பாதுகாப்பு கருதி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

“குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.

தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் ஜனவரி 25ஆம் தேதி (இன்று) முதல் ஜனவரி 26ஆம் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”, என்று தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government announcement regarding republic day 2023