Advertisment

ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

author-image
WebDesk
New Update
TNSTC Jobs; அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu News: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Advertisment

தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். 

publive-image

இதில் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருந்த அறிவுரைப்படி, திருவிழா காலங்களில் சென்னையிலிருந்து கூடுதலாக பயணிக்கின்ற பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து கூடுதலாக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற பேருந்துகளின் எண்ணிக்கை 16,888 ஆகும். இந்த பேருந்துகள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்தும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி பை-பாஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும் மற்றும் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இதையடுத்து, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு நாளும் 2,100 பேருந்துகள் என்று இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

மேலும், அக்டோபர் 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1,437 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 22ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று 1,588 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல்,தமிழகத்தில் பிற பகுதிகளில் 6,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து மொத்தம் 16,888 பேருந்துகள் தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படுகிறது.

அனைத்து போக்குவரத்து கழகத்தினுடைய இயக்குனர்கள், போக்குவரத்து பிரிவினுடைய உயர் அலுவலர்கள், காவல் துறை, சென்னை பெரு மாநகராட்சினுடைய அலுவலர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் என பல்வேறு துறையினுடைய உயர் அலுவலர்களை கொண்டு ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறையின் சிறப்பு செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேருந்துகளெல்லாம் சென்னை நகருக்குள் பொறுமையாக வந்து வெளியேறுகின்ற வரை எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல் போக்குவரத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதோடு, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் அவர்கள்மீது புகார் அளிப்பதற்கு சில எண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 1800-45-6151, 044-2474-9002, 044-2628-0445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு பேருந்துகளின் இயக்கம் குறித்து தெரிந்துகொள்வதற்கும் அல்லது அதில் ஏதேனும் புகார் இருந்தால் தெரியப்படுத்துவதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இரண்டு எண்கள் வழங்கப்படுகிறது.

அது, 94450 14450/ 94450 14436 ஆகிய இரண்டு எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

அதைப்போல, இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் இதுவரை சென்னையில் இருந்து செல்வதற்கு 38,000 பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். மற்ற இடங்களில் இருந்து, போக்குவரத்து மேற்கொள்வதற்கு 18,000 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆன்லைன் முன்பதிவு செய்வதற்கு TNSTC-யின் செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். அதைப்போல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மேப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Bus Nhai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment