scorecardresearch

அரசு விரைவு பஸ்களில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு

அரசு பேருந்துகளில் படுக்கை வசதி உள்ளவைகளில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu bus

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் முறை அமலுக்கு வந்திருக்கிறது.

அரசு பேருந்துகளில் படுக்கை வசதி உள்ளவைகளில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை மட்டும் உள்ள அரசு பேருந்துகளில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள அரசு பேருந்துகளில் இரண்டு இருக்கை மற்றும் இரண்டு படுக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.

மேற்கண்ட வசதிகள் அனைத்தும் இன்று முதல் பொதுமக்களின் வசதிக்காக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government bus facility announcement