Chennai Tamil News: பெண்களுக்காக ஒதுக்கப்படும் பிரத்யேக பேருந்திற்கு முழுவதுமாக இளஞ்சிவப்பு வர்ணம் அளிக்கப்படுகிறது.
சமூகவலைத்தளங்களில் பல்வேறு தரப்பில் இருந்து வந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) தனது இளஞ்சிவப்பு பேருந்துகளின் எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரியாகத் தோன்றும் வகையில் இளஞ்சிவப்பு நிறம் வர்ணம் பூசப்படுகிறது.
எக்ஸ்பிரஸ்/டீலக்ஸ் பேருந்துகளில் இருந்து பெண்கள் சாதாரணமாக வேறுபடுவதற்கு உதவும் வகையில் 50 சாதாரண பேருந்துகள் (பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று ஒதுக்கிய பேருந்துகளுக்கு) இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்படும் என்று மாநகராட்சி முன்பே அறிவித்தது.
ஆனால், முன்பக்கமும், பின்பக்கமும் மட்டும் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டது. செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக மீதமுள்ளவை அப்படியே விடப்படும் என்று கூறினர். இது ஒரு மோசமான தோற்றத்தைக் கொடுத்ததால், சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகியது. இதையடுத்து, பேருந்துகளுக்கு முழுமையான இளஞ்சிவப்பு வர்ணம் பூசவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil