தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஆன்லைன் முன்பதிவு செய்யும் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
மொத்தம் 75 பேருக்கு பரிசு மழை
தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படவுள்ளன:
முதல் 25 நபர்களுக்கு: வருடத்தில் 20 முறை இலவச பயணம்! (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை)
அடுத்த 25 நபர்களுக்கு: வருடத்தில் 10 முறை இலவச பயணம்! (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை)
கடைசி 25 நபர்களுக்கு: வருடத்தில் 5 முறை இலவச பயணம்! (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை)
நீங்களும் வின் பண்ணலாம்
நீங்களும் இந்த அதிர்ஷ்டசாலிகள் பட்டியலில் இடம்பெறணுமா? அப்போ உடனே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in -க்கு போங்க... உங்க டிக்கெட்டை ஆன்லைன்ல புக் பண்ணுங்க! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!