Advertisment

கிண்டி, திண்டுக்கல் மருத்துவமனைகள்: முக்கிய உபகரணங்கள் வாங்க ரூ 332 கோடி ஒதுக்கீடு

ஆபரேஷன் தியேட்டர் வளாகம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுவதற்கு ரூ.81,60,73,174 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.

author-image
WebDesk
Jun 02, 2023 10:28 IST
government hospital

மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதியை தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கான உத்தரவில், 331,92,58,085 ரூபாய்க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

கிண்டி மற்றும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மருத்துவமனையின் ஏ பிளாக்கில் அவுட் பேஷண்ட் பிளாக் மற்றும் நிர்வாகக் கட்டிடம் கட்ட ரூ.81,40,85,196 கோடியும், ஆபரேஷன் தியேட்டர் வளாகம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுவதற்கு ரூ.81,60,73,174 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.

கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச் வளாகத்தில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவியதில், பிளாக் பி மற்றும் பிளாக் சிக்கான கதிரியக்க நோயறிதல் தொகுதி மற்றும் வார்டுகள் கட்டிடம் கட்ட ரூ.77,52,40,888 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment